“மலையாள படமான ‘நாயட்டு’ தான் ‘கஸ்டடி’ -க்கு இன்ஸ்பிரேஷன்” - வெங்கட் பிரபு

By செய்திப்பிரிவு

“மலையாளத்தில் வெளியான ‘நாயட்டு’ படம் தான் ‘கஸ்டடி’ படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தது” என இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

நாகசைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘கஸ்டடி’ படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இயக்குநர் வெங்கட்பிரபு, “இது ஒரு அடர்த்தியான கதையம்சம் கொண்ட திரைப்படம். மலையாள படமான ‘நாயட்டு’ படத்தைப்பார்த்து இது போல ஒரு படத்தை இயக்க வேண்டும் என நினைத்தேன்.

இதை நம் பார்வையாளர்களுக்கு ஏற்றார்போல கமர்ஷியலாக்கினேன். ‘நாயட்டு’ தான் ‘கஸ்டடி’ படத்துக்கு உந்துதலாக இருந்தது. நான் எழுதிய எல்லா விஷயத்தையும் படம் பிடிக்க காரணம் தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு. அவர்களுக்கு நன்றி. 90-களில் நடக்கும் கதையைத்தான் எழுதியிருக்கிறேன். அந்த உணர்வை திரையில் பிரதிபலிக்கக் கோரி நான் இளையராஜாவின் இசையை நாடினேன். படத்தில் பிரேம்ஜி அடம்பிடித்து நடித்தார். மேலும் பின்னணி இசையை சரியாக அவரே மிக்ஸ் செய்தார். படத்தில் நிறைய ஆச்சரியங்கள் உங்களுக்கு காத்திருக்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்