‘ஜெர்ஸி’ இயக்குநருடன் கைகோக்கும் விஜய் தேவரகொண்டா 

By செய்திப்பிரிவு

தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஜெர்ஸி’ பட இயக்குநர் கௌதம் தின்னூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ஸ்போர்ட் ட்ராமா படமான ‘ஜெர்ஸி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை கௌதம் தின்னூரி இயக்கியிருந்தார். அவர் அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப்படத்திற்கான அறிவிப்பு விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளையொட்டி இன்று வெளியானது. இந்தப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். ‘VD12’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் படத்தை சிதாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதனிடையே காஷ்மீரில் படமாக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE