ஹைதராபாத்: “பிரபாஸ் கடவுள் ராமரைப்போல எளிமையானவர்” என்று ‘ஆதிபுருஷ்’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்வில் நடிகை கீர்த்தி சனோன் பிரபாஸூக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் கீர்த்தி சனோன் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரபாஸ், “இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த இயக்குநர் ஓம் ராவத்துக்கு நன்றி. மிகுந்த அன்புடனும், மரியாதையுடன் இப்படத்தில் நடித்துள்ளேன். படம் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை கீர்த்தி சனோன், “நடிகர் பிரபாஸ் கடவுள் ராமரைப்போல எளிமையான மனிதர். மனதில் தோன்றியதை நேரடியாக பேசக்கூடியவர். படத்தில் ஜானகி கதாபாத்தில் நடிக்க என்னை தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. ஏனென்றால் சில நடிகர்களுக்கு மட்டுமே அவர்களது வாழ்நாளில் இப்படியான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் மிகுந்த நேர்மையுடனும், நம்பிக்கையுடனும், மரியாதையுடனும் நடிக்க முயற்சித்தேன். எனக்கு படத்தின் மீது நம்பிக்கை இருந்தது; நான் கதையை புரிந்துகொண்டபின் படமாக்கப்படும் போது அந்த நம்பிக்கை இன்னும் எனக்குள் அதிகரித்தது” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
29 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago