கஸ்டடி, இராவண கோட்டம், ஃபர்ஹானா, குட் நைட் - இந்த வார ரிலீஸில் 4 முக்கிய படங்கள்

By செய்திப்பிரிவு

இந்த வாரம் மே 12-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவற்றின் முன்னோட்டக் குறிப்புகளைப் பார்ப்போம்.

கஸ்டடி: நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. இந்தப் படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா, யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் வெளியாகிறது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவரின் ‘மன்மத லீலை’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அடுத்ததாக ‘கஸ்டடி’யை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர். படம் இந்த வாரம் வெளியாகிறது.

இராவண கோட்டம்: ‘மதயானைக் கூட்டம்’ திரைப்படம் மூலம் தனது இருப்பை அழுத்தமாக பதிய வைத்தவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். இவரது இயக்கத்தில் அடுத்தாக உருவாகியுள்ள படம் ‘இராவண கோட்டம்’. சாந்தனு பாக்யராஜ், கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகளை அடிப்படையாக வைத்து படம் உருவாகியுள்ள இப்படம் மே 12-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஃபர்ஹானா: ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இப்படத்தில் ‘ஜித்தன்’ ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் முஸ்லீம பெண் ஒருவரை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படம் வரும் மே12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குட் நைட்: ‘காலா’, ‘ஜெய்பீம்’ படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த மணிகண்டன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘குறட்டை’யால் ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படமும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்