‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ மிகவும் பிடிக்கும் - ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்

By செய்திப்பிரிவு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும் என்று பாலிவு நடிகர் ஷாருக்கான் தெரிவித்தார்.

’பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.

முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், இறுதிகட்ட பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு ஒருமுறை தனது ட்விட்டர் பக்கத்தில் #AskSRK என்ற ஹேஷ்டேகின் கீழ் தன் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஷாருக் பதிலளித்தார்.

அதில் அட்லி இயக்கத்தில் தங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது என்று ஷாருக் கானிடம் ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஷாருக், ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்கள் மிகவும் பிடித்திருந்தது என்று தெரிவித்தார். அவரது இந்த பதிவை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 secs ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்