மும்பை: ‘ஆதிபுருஷ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
ராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 16-ம் தேதி வெளியாகிறது.
கடந்த ஆண்டு இப்படத்தின் முதல் டீசர் வெளியானபோது அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கு உள்ளாகின. பல காட்சிகளை ஹாலிவுட்டில் வெளியான பல படங்களில் இருந்து காட்சிக்கு காட்சி அப்படியே நகலெடுத்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் ஆதாரங்களுடன் பதிவிட்டனர். இதனை கருத்தில் கொண்டு படத்தின் கிராபிக்ஸ் தரத்தை மேம்படுத்த படக்குழு முடிவு செய்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது கிராபிக்ஸ் மெருகூட்டும் பணிகள் நிறைவடைந்துவிட்டதால் படத்தின் ட்ரெய்லரை வரும் மே 09ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியாகிறது.
» யாதும் ஊரே யாவரும் கேளிர் ரிலீஸ் எப்போது?
» ‘இது என் கடையாக இருக்காது’.. - லைவ் வீடியோவில் நடிகை சதா கண்ணீர்