சுவாரஸ்யம் கூட்டும் களமும் காட்சிகளும் - ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் ‘கலியுகம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகியுள்ள ‘கலியுகம்’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரமோத் சுரேஷ் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கலியுகம்’. ஆர்கே இன்டர்நேஷனல் இன்க் மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் படத்தை தயாரித்துள்ளனர். டான் வின்சென்ட் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ‘இந்த உலகம் உணவு, நீர், மனிதநேயத்தை இழக்கும்போது’ என்ற வாசகங்களுடன் தொடங்கி காலம் 2064 என குறிப்பிடப்படும்போது ட்ரெய்லர் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. ‘பசியால சாகப்போறோமா? போராடி சாகப்போறோமா?’ என்ற வசனமும் அதற்கேற்ற அடுத்தடுக்க காட்சிகளும் பசியின் கொடூரத்தையும், எதிர்காலத்தின் ஆபத்தையும் உணர்த்துகிறது. இதன் மூலம் படம் பசியை மையப்படுத்தி உருவாகியுள்ளது தெளிவாகிறது.

க்ளோசப் ஷாட்ஸும், ப்ரேமும், கலர் டோனும் அழகியலுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் அழுத்தமான கதையை படம் கொண்டிருப்பதையும் ட்ரெய்லர் உறுதி செய்கிறது. ‘கலியுகம்’ என்ற டைட்டிலும், பசியை மையப்படுத்திய கதைக்களமும் எதிர்காலச்சூழலை வெளிச்சப்படுத்தும் காட்சிகளும் படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியுள்ளது. படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்