நடிகை த்ரிஷாவுக்கும் ‘லியோ’ 67-வது படம் என படத்தின் தயாரிப்பு நிறுவனம், த்ரிஷாவின் பிறந்த நாளையொட்டி வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1999-ம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தின் சிறிய கதாபாத்திரம் மூலம் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை த்ரிஷா. 2002-ம் ஆண்டு வெளியான ‘மௌளம் பேசியதே’ படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்தவருக்கு கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘கில்லி’ முக்கியமான படமாக அமைந்தது. தொடர்ந்து ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.
இதையடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் வெளியாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், நடிகை த்ரிஷாவின் பிறந்த நாளையொட்டி ‘லியோ’ படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் “லியோ உங்களின் 67வது திரைப்படம் என்பது எங்களுக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ‘லியோ’ விஜய்யின் 67-வது படமும் கூட. இதனால் விஜய் - த்ரிஷா தத்தம் 67-வது படத்தில் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் கொடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago