சென்னை: நடிகர் மனோபாலாவின் உடல் வளசவரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் நேற்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பிரச்சினையால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் மற்று சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட மனோபாலாவின் உடலுக்கு நடிகர்கள் விஜய், கவுண்டமணி, சூரி, இயக்குநர்கள் மணிரத்னம், பி.வாசு. ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் இன்று (மே 04) நண்பகல் 12 மணி அளவில் சாலிகிராமத்தில் உள்ள மனோபாலாவின் வீட்டிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தின்போது ஏராளமான பொதுமக்கள் வழிநெடுக மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
திரைப்பயணம்: பாரதிராஜாவிடம் ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்த மனோபாலா, கார்த்திக் நடித்த ‘ஆகாய கங்கை’ படம் மூலம் இயக்குநர் ஆனார். 1982ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து மோகன் நடிப்பில் ‘பிள்ளை நிலா’ படத்தை இயக்கினார். இது வெற்றிபெற்றது. அடுத்த ‘சிறைப்பறவை’, ரஜினி நடித்த ‘ஊர்க்காவலன்’, விஜயகாந்த் நடித்த ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’, சத்யராஜ் நடித்த ‘மல்லுவேட்டி மைனர்’, ஜெயராம் நடித்த ‘நைனா’ உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார். ‘சதுரங்கவேட்டை’, ‘பாம்புச் சட்டை’, ‘சதுரங்கவேட்டை 2’ படங்களைத் தயாரித்துள்ளார்.
300-க்கும் அதிகமான திரைப்படங்களில் காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சிறிய வேடங்களில் தலைகாட்டி வந்த அவர், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘நட்புக்காக’ படத்துக்குப் பிறகு முழு நேர நடிகரானார். பிதாமகன், பாய்ஸ், காதல் கிறுக்கன், பேரழகன், கஜினி, தலைநகரம், இம்சை அரசன் 23ம் புலிகேசி, சந்திரமுகி, கலகலப்பு உட்பட பல படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது. சிவாஜி, ரஜினியில் தொடங்கி இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார். சில சின்னத்திரைத் தொடர்களை இயக்கியுள்ள அவர், அதிலும் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக யூடியூப்பிலும் பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago