கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதனை ராஜ்கமல் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
» பெரிய பட்ஜெட் படங்களால் திரைத்துறைக்கு சேதம்: நவாசுதீன் சித்திக்
» ஆருத்ரா வழக்கு | ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago