நாகர்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் அக்கினேனி. இவர் ஹீரோவாக நடித்து வெளியான படம், ‘ஏஜென்ட்’. சுரேந்தர் ரெட்டி இயக்கி இருந்த இந்தப் படத்தில் மம்மூட்டி, டினோ மோரியா, சாக்ஷி வைத்யா, வரலட்சுமி உட்பட பலர் நடித்திருந்தனர். ஹிப் ஹாப் தமிழா இசை அமைத்திருந்தார். மெகா பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.
இந்நிலையில், முழுமையான ஸ்கிரிப்டுடன் படப்பிடிப்புக்குச் செல்லாததே தோல்விக்கு காரணம் என்று தயாரிப்பாளர் அனில் சுன்காரா தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்தப் படத் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். முழுமையான ஸ்கிரிப்ட்டுடன் படப்பிடிப்புக்குச் செல்லாமல் தவறு செய்தோம். கரோனாவால் பிரச்சினைகளைச் சந்தித்தோம். இதற்காக எந்த சாக்குபோக்கையும் சொல்ல விரும்பவில்லை. இந்த ‘காஸ்ட்லி’ தவறில் இருந்து பாடம் கற்றிருக்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். சரியான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பால் இந்த இழப்பை ஈடுகட்டுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago