பட்ஜெட் ரூ.80 கோடி... 4 நாட்கள் வசூல் ரூ.10 கோடி -  இழப்பை சந்திக்கும் ‘ஏஜென்ட்’

By செய்திப்பிரிவு

அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஏஜென்ட்’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.10 கோடியை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆஃபீஸில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில் அக்கினேனி நடித்துள்ள படம் ‘ஏஜென்ட்’. இப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைதளங்களிலும் இப்படத்துக்கு பயங்கர ஹைப் கொடுக்கப்பட்டது.
பெரும் பொருட்செலவில் வெளியான இப்படம் முதல் நாளான கடந்த 28-ம் தேதி நாடு முழுவதும் ரூ.6 கோடி மட்டுமே வசூலித்திருந்தது. இது தயாரிப்பு தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்த நிலையில் இரண்டாவது நாள் இப்படம் வெறும் ரூ.1.6 கோடி மட்டுமே வசூலித்தது. இது முதல் நாள் வசூலை காட்டிலும் 73% குறைவாகும்.

இரண்டு நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ.7.5 கோடி மட்டுமே. நேற்று திங்கட்கிழமை படம் வெறும் ரூ.75 லட்சத்தை மட்டும் வசூலித்தது. இந்நிலையில், படம் வெளியாகி இதுவரை 4 நாட்களையும் சேர்த்து வெறும் ரூ.10 கோடியை மட்டுமே வசூலாகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மம்மூட்டியின் இருப்பும் கூட இப்படத்துக்கு கை கொடுக்கவில்லை என்பது சோகம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE