1 லட்சம் முத்துகள் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ‘மெட் காலா’ (MET Gala) நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்துகொண்டார். அவரின் இந்த ஆடை ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘கங்குபாய் கத்தியாவடி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘ஆர்ஆர்ஆர்’, ‘டார்லிங்க்ஸ்’, ‘பிரம்மாஸ்திரா’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கரண் ஜோஹர் இயக்கத்தில் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற படம் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், நியூயார்க் நகரில் நடந்த ‘மெட் காலா’ (MET Gala) எனும் ஆடை அலங்கார நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்துகொண்டார். இதில் 1 லட்சம் முத்துகள் பதிக்கப்பட்ட அவரின் ஆடை ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தனது இந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆலியா பட், “எந்தப் பெண்ணும் இத்தனை முத்துகளை கொண்டிருக்க மாட்டார். இந்த ஆடையை அணிவதை நான் பெருமையாக கருதுகிறேன். ஒரு லட்சம் முத்துகள் பதிக்கப்பட்ட இந்த ஆடை தொழிலாளர்களின் அன்பால் விளைந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆடை என்பதை குறிப்பிடுவதில் பெருமைபடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
» குறட்டையும் சிக்கல்களும் - மணிகண்டனின் ‘குட் நைட்’ ட்ரெய்லர் எப்படி?
» “சல்மான் கானுக்கு இந்தியாவில் பாதுகாப்பு பிரச்சினை எதுவும் இல்லை” - தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கம்
இந்த ஆண்டு அலியா பட் தவிர பிரியங்கா சோப்ரா, நடாஷா பூனவாலா மற்றும் இஷா அம்பானி ஆகியோர் இந்த பிரம்மாண்ட ஆடை அலங்கார கண்காட்சியில் கலந்து கொண்டனர். நடிகை ஆலியா ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago