தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - தலைவராக ‘தேனாண்டாள்’ முரளி வெற்றி

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். டி. மன்னனை விட 150 வாக்குகள் அதிகம் பெற்று தலைவராகியுள்ளார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 - 2026ம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் கலைக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு துவங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
இந்த தேர்தலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ராதாரவி, மோகன், ராமராஜன், நாசர், பாகயராஜ், பூர்ணிமா பாக்யராஜ், எஸ்.வி.சேகர், ஆர்யா, ஸ்ரீகாந்த், சசிகுமார், சின்னி ஜெயந்த், டெல்லி கணேஷ், விக்னேஷ், விஷ்ணு விஷால், ராதிகா உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாக்களித்தனர்.

இந்நிலையில் இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கியது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி பெற்றுள்ளார். டி. மன்னனை விட 150 வாக்குகள் அதிகம் பெற்று தலைவராகியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE