நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் 'சுல்தான்' படத்தில் நடித்திருந்த அவர், விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் நடித்தார். இப்போது ‘ரெயின்போ’, ‘புஷ்பா 2’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர், ரசிகர்களின் கேள்விகளுக்கு அதில் பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் 38 மில்லியன் பாலோயர்களை அவர் தொட்டுள்ளார். அதாவது 3 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரைப் பின் தொடர்கின்றனர். விரைவில் 4 கோடியை தொடுவார் என்கிறார்கள். அதிக பாலோயர்களை கொண்ட தென்னிந்திய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago