“விஜய், லோகேஷ் கனகராஜ் சேர்ந்தா ஆக்ஷன் இல்லாம எப்படி?” என ‘லியோ’ படம் குறித்து நடிகரும் இயக்குநருமான மிஷ்கின் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்று வரும் தேர்தலில், இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் தனது வாக்கினை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “லியோ திரைப்படம் சிறப்பாக உருவாகி வருகிறது. சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருத்திருக்கிறேன்.
இருந்தாலும் இன்ட்ரஸ்டிங்கான கதாபாத்திரமாக இருக்கும். நீண்ட நாட்களுக்குப்பிறகு விஜயுடன் இருந்தது மிகவும் சந்தோஷம். தம்பி என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். அன்போடு இருந்தார். 20 வருடமாக இன்னும் மாறவேயில்லை. அதே அன்பு அவரிடம் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் குறித்து சொல்லவே வேண்டாம்; ஸ்வீட்டான பையன். மேன்மையாக நடத்துகிறார். விஜய்யும் லோகேஷ் கனகராஜூம் இணந்தால் ஆக்ஷன் இல்லாமல் எப்படி? படம் நல்லாருக்கும். அடுத்து நான் தாணு தயாரிப்பில் படம் இயக்குகிறேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago