பொன்னியின் செல்வன் 2 வெற்றி குறித்து நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
வரலாற்று புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள். வீர வேல்! வெற்றி வேல்! - ஆதித்த கரிகாலன்” என்று கூறியுள்ளார்.
» “பெண்கள் எந்த அளவிற்கு உடலை மறைக்கிறார்களோ அவ்வளவு நல்லது” - சல்மான்கான்
» ட்விட்டரில் இருந்து தற்காலிக ஓய்வு - சிவகார்த்திகேயன் அறிவிப்பு
மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல..
மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல்.
என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள்.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago