தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தார் ரஜினிகாந்த் 

By செய்திப்பிரிவு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வாக்குப்பதிவு மையத்திற்கு நேரில் சென்று நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவராக உள்ள தேனாண்டாள் முரளியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர். மேலும், இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர். இன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன், வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாக்குப்பதிவு மையத்திற்கு நேரில் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். கமல்ஹாசனும் வாக்குப்பதிவு மையத்திற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குர்கள், நடிகர்கள் பலரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE