அஜித் பிறந்தநாளில் ‘ஏகே 62’ படத் தலைப்பு வெளியாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி மே 1-ம் தேதி ‘ஏகே 62’ படத்தின் டைட்டிலுடன் கூடிய அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அஜித் பிறந்தநாள் பரிசாக இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டு லைகா நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ‘ஏகே 62’விலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டிருக்கிறார். தயாரிப்பு தரப்பு கதையில் மாற்றங்களை செய்ய சொன்னதாகவும், அதற்கு விக்னேஷ் சிவன் ஒப்புக்கொள்ளாததால் படத்திலிருந்து அவர் விலகப்பட்டார் என தகவல் வெளியானது.

இதனையடுத்து அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி இதனை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் படத்தின் தலைப்புடன் கூடிய அறிவிப்பு வெளியாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்