விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’ ட்ரெய்லர் வெளியானது

By செய்திப்பிரிவு

விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘பிச்சைக்காரன்’. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதில் ஹீரோவாக நடித்து படத்தை இயக்குகிறார் விஜய் ஆண்டனி. அவரே இசையமைத்து தயாரித்தும் உள்ளார்.
இதன் பாடல் காட்சி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் நலமடைந்தவர் படத்தை வெளியிடும் பணிகளில் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தில் காவ்யா தாபர், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, ஒய்.ஜி.மகேந்திரா, அஜய் கோஷ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘பிச்சைக்காரன் 2’ படம் கடந்த 14-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகவில்லை. மே 19-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்