ரூ.150 கோடி வசூலித்த சல்மான் கான் நடித்த ‘வீரம்’ இந்தி ரீமேக்

By செய்திப்பிரிவு

‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.151.12 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகியுள்ள படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan). சல்மான் கான் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜெகபதி பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘கேஜிஎஃப்’ புகழ் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வெளியான இப்படம் உலக அளவில் வார விடுமுறை நாட்களில் ரூ.112 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சல்மான் கான் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் படம் வெளியாகி 7 நாட்கள் கடந்த நிலையில், உலகம் முழுவதும் ரூ.151.12 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்