ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் ‘ப்ரேக்அவுட்’ என்ற ஆக்ஷன் த்ரில்லர் படம் மூலமாக மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றவுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘டெர்மினேட்டர்: டார்க் ஃபேட்’ (Terminator: Dark Fate) படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 4 ஆண்டுகளாக அவரை ரசிகர்கள் திரையில் காணாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் அவர் ‘ப்ரேக் அவுட்’ என்ற ஆக்ஷன் த்ரில்லர் படம் மூலமாக மீண்டும் திரையில் தோன்ற இருக்கிறார்.
சிறையிலிருக்கும் தனது வளர்ப்பு மகனை காப்பாற்ற போராடும் டெர்ரி ரெனால்ட்ஸ் என்ற கதாபாத்திரத்தில் அர்னால்டு நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் கிழக்கு ஐரோப்பாவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ‘ஃபுபார்’ (FUBAR) என்ற வெப்சீரிஸில் அர்னால்டு நடிக்கிறார். அவர் நடிக்கும் இந்த முதல் வெப் சீரிஸ் வரும் மே மாதம் 25-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. அர்னால்டு இந்த வெப் சீரிஸில் 65 வயது ஓய்வுபெற்ற சிஐஏ ஏஜெண்டாக நடிக்கிறார். தந்தை - மகளுக்கு இடையிலான உறவை நகைச்சுவை பாணியில் சொல்லும் வெப் சீரிஸாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago