‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடல் 1 நிமிட வீடியோ 

By செய்திப்பிரிவு

‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் 1 நிமிட வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெற்றுள்ள ‘சின்னஞ்சிறு நிலவே’ பாடலின் 1 நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. பாடலை ஹரிஹரன் பாடியுள்ளார். இந்தப்பாடல் ஆதித்த கரிகாலன் (விக்ரம்) - நந்தினி (ஐஸ்வர்யா ராய்) இடையிலான காதல் பிரிவை உணர்த்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE