ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மே12-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் 'ஃபர்ஹானா' மட்டுமல்ல, பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை நுணுக்கமாகப் பிரதிபலிக்கும் ஒரு கதையாக உருவாகியுள்ளது.
'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்' என தனது முதல் 2 படங்களின் மூலம் கவனம் ஈர்த்த நெல்சன் வெங்கடேசன் 'ஃபர்ஹானா'வை இயக்கியுள்ளார். மேலும் இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'பண்ணையாரும் பத்மினியும்', 'மான்ஸ்டர்' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தேசிய விருது பெற்ற சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார். மே 12-ம் தேதி மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது 'ஃபர்ஹானா'.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago