சென்னை: "விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நான் ஒரே ஆளாக எதிர்த்து அனைத்துப் பக்கங்களிலும் சண்டை செய்ய முடியவில்லை. எனவே, அவரும் வந்தால் இன்னும் கொஞ்சம் ஆதரவாக இருக்கும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளன்று மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய்யின் அரசியல் பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அரசியலுக்கு வருவதற்கான முயற்சிகளை விஜய் செய்கிறார். அதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் அரசியல் மாற்று என்பதில், இந்தக் கட்சியை விட்டால் அந்தக் கட்சி, அந்தக் கட்சியைவிட்டால் இந்தக் கட்சியென்று, இந்த நிலமும், மண்ணும் ஒரு அரை நூற்றாண்டைக் கடந்துவிட்டது.
விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வரும்போது இன்னும் வலிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நான் ஒரே ஆளாக எதிர்த்து அனைத்துப் பக்கங்களிலும் சண்டை செய்ய முடியவில்லை. எனவே, அவரும் வந்தால் இன்னும் கொஞ்சம் ஆதரவாக இருக்கும். எனவே, அவர் வரவேண்டும். நாங்கள் தொடக்க காலத்தில் இருந்தே இதுபோன்ற பணிகளை எல்லாம் செய்தோம். எனவே, அவர் வரவேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக இதையெல்லாம் செய்கிறார். எனவே, அது பாராட்டுக்குரியது" என்றார்.
அப்போது ஒருவேளை விஜய் அரசியல் கட்சி தொடங்கினால், சீமான் ஆதரவு கிடைக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நான் யாரையும் ஆதரிப்பது இல்லை.
விஜய்தான் என்னை ஆதரிக்க வேண்டும். நான் எதற்கு அவரை ஆதரிக்க வேண்டும்? நான் ஒரு தனித்த பேரியக்கமாக வரவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு கனவு இருக்கிறது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
49 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago