ஜூன் 29-ல் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ ரிலீஸாக வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்று, செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படம் பக்ரீத் பண்டிகையையொட்டி வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதே நாளன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படமும் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தீவிரமெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்