ராமானுஜரின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘ஸ்ரீ ராமானுஜர்’ என்ற படம் உருவாகியுள்ளது. ஹயக்கிரீவா சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் டி. கிருஷ்ணன், ராமானுஜராக நடித்து தயாரித்துள்ளார். ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மன், அனு கிருஷ்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 24ம் பட்டம், ஸ்ரீ சடகோபர் இராமானுஜர் பங்கேற்றார்.
படம் பற்றி டி.கிருஷ்ணன் கூறும்போது, “ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்தவர் ஸ்ரீ இராமானுஜர். அந்த மாபெரும் மகானின் வாழ்க்கைக் கதையை காவியமாக உருவாக்கியுள்ளோம். சமூக நீதிக்காக அவர் என்னவெல்லாம் செய்தார் என்று இந்தப் படம் பார்க்கும்போது புரியும். இதை சிரமப்பட்டு எடுத்திருக்கிறேன். 2018-ம் ஆண்டிலேயே வெளியாகியிருக்க வேண்டும். பல்லேறு சூழல்களால் தாமதமாகிவிட்டது. கலை இயக்குனர் மகி, ரங்கம், திருப்பதி, சோழ அரண்மனை செட்களை பிரம்மாண்டமாக அமைத்துள்ளார்” என்றார். ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
45 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago