‘சூது கவ்வும் 2’ படத்தில் மிர்ச்சி சிவா?

By செய்திப்பிரிவு

‘சூது கவ்வும் 2’ படத்தில் மிர்ச்சி சிவா நடிக்க உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. டார்க் காமெடி பாணியில் உருவான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை எழுந்துள்ளது. முதல் பாகத்தைத் தயாரித்த சி.வி.குமார் இதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க இருக்கிறார். இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார்.

இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் ‘மிர்ச்சி’ சிவா நடிக்க இருக்கிறார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர். நாளை மறுநாளில் இருந்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் இன்னும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்