கங்குவா | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பு!

By செய்திப்பிரிவு

சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்திற்கு ‘கங்குவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு வீடியோ பகிர்ந்து அறிவித்துள்ளது. இது ஃபேன்டஸி கதையை மையமாகக் கொண்ட படம் என்றும். ஆயிரம் வருடத்துக்கு முன்பும் தற்போதைய காலகட்டத்திலும் கதை நடப்பது போல படம் உருவாக்கப்படுவதாகவும் தகவல். இந்த வீடியோவும் அதனை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

இந்தப் படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. படத்தை ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இதில், திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த மிருணாள் தாக்கூர் மற்றொரு நாயகி என தெரிகிறது. அரத்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டார், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

மேலும்