‘ருத்ரன்’ முதல் ‘சாகுந்தலம்’ வரை - தமிழ்ப் புத்தாண்டுக்கு படையெடுக்கும் 7 படங்கள்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டையொட்டி 7 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

திருவின் குரல்: லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் அருள்நிதி மற்றும் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘திருவின் குரல்’. ஹரிஷ் பிரபு இயக்கியுள்ள இப்படதிற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். படம் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.

ருத்ரன்: கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ருத்ரன்’. சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பான் இந்தியா முறையில் வெளியாகும் படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு ரிலீசாகிறது.

சாகுந்தலம்: சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படத்தைத் தெலுங்கு இயக்குநர் குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் உட்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். 3டி-யில் உருவாகியுள்ள இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

சொப்பன சுந்தரி: எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி ப்ரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சொப்பன சுந்தரி’. விவேக் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகிறது.

தமிழரசன்: பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘தமிழரசன்’. ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 14) வெளியாகிறது.

யானை முகத்தான்: இயக்குநர் ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் யோகிபாபு, ரமேஷ் திலக் நடித்துள்ள படம் ‘யானை முகத்தான்’. முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தி கிரேட் இந்தியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பரத் ஷங்கர் இசையமைத்துள்ள படம் ஏப்ரல் 14-க்கு வெளியாகிறது.

ரிப்பப்பரி: மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரிப்பப்பரி. காவ்யா அறிவுமணி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை அருண் கார்த்திக் இயக்கியுள்ளார். படம் தமிழ்ப் புத்தாண்டு திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE