‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரேற்பை பெற்றது. இதையடுத்து மாரிசெல்வராஜ் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தனுஷை பொறுத்தவரை அவரது நடிப்பில் ‘நானே வருவேன்’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இதையடுத்து அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் நடிகர் தனுஷூம் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்படத்தை தனுஷின் வொண்டார்பார் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளது. பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago