“அருவருப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது” - சல்மான்கானுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் கண்டனம்

By செய்திப்பிரிவு

“நமது கலாச்சார உடை அருவருப்பான முறையில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது” என்று நடிகர் சல்மான் கானின் ‘யெண்டம்மா’ பாடல் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன் கண்டம் தெரிவித்துள்ளார்.

தமிழில் அஜித் நடித்து வெற்றி பெற்ற ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘கிஸி கி பாய், கிஸி கி ஜான்’ படத்தில் சல்மான் கான் நடிக்கிறார். இப்படத்தில் வெளியான சமீபத்திய பாடலில், தென்னிந்திய கலாச்சார உடையான வேட்டி சட்டையை இழிவுபடுத்துவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

சல்மான்கான் நடித்துள்ள ‘ கிஸி கி பாய், கிஸி கி ஜான்’ படத்தின் ‘எண்டம்மா’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதில் வேட்டி கட்டிக்கொண்டு சல்மான் கான் ஆடும் நடன அசைவுகள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன், “இது நமது தென்னிந்திய கலாச்சாரத்தை மிகவும் கேலி செய்கிறது மற்றும் இழிவுபடுத்துகிறது. மிகவும் அபத்தமான செயல். அது லுங்கி அல்ல, அது வேட்டி . நமது கலாச்சார உடையானது அருவருப்பான முறையில் காட்டப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ட்விட்டரில் அந்தப் பாடலையும் பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE