தெய்வ மச்சான் படத்தில் ‘டாக்டர்’ ஹீரோயின்!

By செய்திப்பிரிவு

விமல் நாயகனாக நடித்துள்ள படம் 'தெய்வ மச்சான்'. அவர் ஜோடியாக நேகா நடிக்கிறார். பாண்டியராஜன், 'ஆடுகளம்' நரேன், பாலசரவணன், வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடிக்கின்றனர்.

கேமில் ஜே. அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு காட்வின் இசையமைத்துள்ளார். உதய் புரொடக்சன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் உதயகுமார், கீதா உதயகுமார், எம்.பி.வீரமணி தயாரித்துள்ளனர்.

வரும் 21ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை இயக்கியுள்ள மார்ட்டின் நிர்மல்குமார் கூறும்போது, “இது அண்ணன் - தங்கை இடையே நடக்கும் கதையை கொண்ட படம். இருந்தாலும் வழக்கமான காட்சி அமைப்புகள் இருக்காது. ஜாலியான, குடும்ப உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படமாக இருக்கும். விமல் பொறுப்பான குடும்பத்தலைவராக நடித்திருக்கிறார்.

அவர் ஜோடியாக நடித்திருக்கும் நேகா, அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருகிறார். இதன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் மீண்டும் அங்கு சென்றுவிட்டார். அவர் கேரக்டர் படத்தில் முக்கியமானதாக இருக்கும். படத்தின் டிரெய்லருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. படமும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE