‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் காளிதாஸ் ஜெயராம்

By செய்திப்பிரிவு

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உட்பட பலர் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது தைவானில் நடக்கிறது. அங்கு முடித்துவிட்டு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இந்தப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவர் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷங்கருடன் இருக்கும் புகைப்படத்தை காளிதாஸ் வெளியிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE