நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து, 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். 2021-ல் கருத்து வேறுபாடால் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பின் நடிப்பில் பிசியாகிவிட்டனர். நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவைக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’, 14ம் தேதி வெளியாகிறது. இதன் புரமோஷனில் கலந்துகொண்ட அவரிடம், நாக சைதன்யாவின் காதல் பற்றி கேட்கப்பட்டதாகவும் அதற்குப் பதிலளித்த சமந்தா, “யார் யாரை காதலிக்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், கண்ணீரில்தான் முடியும். குறைந்தபட்சம் அந்தப் பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தன் நடத்தையையும் பார்வையையும் அவர் மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் இருந்தால், அது அனைவருக்கும் நல்லது” எனக் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தான் அப்படி சொல்லவே இல்லை என்று, இந்த செய்தி வந்த இணையதளப் பக்கத்தை டேக் செய்து சமந்தா மறுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago