நாட்டுப்புறப் பாடகர் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல நாட்டுப்புறப் பாடகரும், திரைப்படப் பின்னணி பாடகருமான ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்.4) காலமானார். அவருக்கு வயது 63.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற ரமணியம்மாள், அந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு
இரண்டாவது பரிசை வென்று பலரது பாராட்டையும் பெற்றிருந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள் என்று அழைக்கப்பட்டார்.

2004-ம் ஆண்டில் வெளியான ‘காதல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'தண்டட்டி கருப்பாயி' பாடல் மூலம் தமிழ் திரையுலகில் ரமணியம்மாள் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், பொம்மை நாயகி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களையும் பாடி புகழ்பெற்றார். இவைத் தவிர மறைந்த ரமணியம்மாள் ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களையும் பாடி வெளியிட்டிருக்கிறார்.

ரமணியம்மாளின் மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும், இசைக் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த ரமணியம்மாளின் உடல் அஞ்சலிக்காக மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

23 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

மேலும்