மெடிக்கல் க்ரைம் களம், விறுவிறுப்பான காட்சிகள்... - அருள்நிதியின் ‘திருவின் குரல்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘திருவின் குரல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மெடிக்கல் க்ரைம் த்ரில்லரை அடிப்படையாக கொண்ட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பவர் அருள்நிதி. அவரது நடிப்பில் கடந்தாண்டு ‘டி ப்ளாக்’, ‘தேஜாவு’, ‘டைரி’ ஆகிய 3 படங்கள் வெளியாகின. தற்போது ‘டிமான்டி காலனி 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவரது நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ‘திருவின் குரல்’. ஹரீஷ் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பாரதிராஜா, ஆத்மிகா, சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - வாய் பேச முடியாத, செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அருள்நிதி. மொத்தப் படமும் மெடிக்கல் க்ரைமை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. கத்தி, ரத்தம், சண்டை, மருத்துவமனை என விறுவிறுப்பாக நகரும் அழுத்தமான காட்சிகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை கூட்டுகின்றன. படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்