“இசையை சந்தித்து நன்றி கூறினேன். ஆசி வாங்கினேன்” என நடிகர் சூரி இளையராஜாவை சந்தித்தது குறித்து நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை பாகம் 1’. பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, சேத்தன், தமிழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இப்படத்தில், ‘ஒன்னோட நடந்தா’, ‘வழி நெடுக காட்டுமல்லி’ ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட்டடித்தன. இந்நிலையில் ‘விடுதலை பாகம் 1’ படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து நடிகர் சூரி இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சற்று நேரம் முன்பு.."இசை"யை சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்..இறைவனுக்கு நன்றி!” எனப் பதிவிட்டுள்ளார்.
» “முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்...” - ‘ரெயின்போ’ குறித்து ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி
» குழந்தைகள் பெயர்களை அறிவித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago