“முதன்மைக் கதாபாத்திரத்தில் நான்...” - ‘ரெயின்போ’ குறித்து ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன்” என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘ரெயின்போ’ என பெயரிடப்பட்டுள்ளது. ஃபேன்டஸி கலந்த காதல் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார்.

படத்தின் அறிமுக இயக்குநர் சாந்தரூபன் படம் குறித்து பேசுகையில், “இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேன்டஸி கதையாக 'ரெயின்போ' இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களம் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்றார்.

நடிகை ரஷ்மிகா பேசுகையில், “ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்" என்று கூறியுள்ளார். இன்று பூஜையுடன் 'ரெயின்போ' படத்தின் தயாரிப்பு தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு ஏப்ரல் 7 அன்று ஆரம்பமாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

55 secs ago

சினிமா

12 mins ago

சினிமா

23 mins ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்