நடிகர் சூர்யா துவக்கிவைத்த இயக்குநர் ஹரியின் புதிய ஸ்டூடியோ

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோவான ‘குட்லக் ஸ்டூடியோஸ்’-ஐ நடிகர் சூர்யா மற்றும் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

திரைத்துறை பணிகளான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் பணிகளை நவீன வசதிகளுடன் திறம்பட செய்யும் புதிய குட்லக் ஸ்டூடியோவை இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவங்கியுள்ளனர். இவ்விழாவில் நடிகர் சூர்யா, தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் எம்.அப்பாவு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு, நடிகர் விஜயகுமார், ஶ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். புதிய ஸ்டூடியோவை தமிழ் நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எம்.எல்.ஏ தலைமையில் நடிகர் சூர்யா ரிப்பன் கட் செய்து துவக்கி வைத்தார்.

முன்னணி நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கம் 40 வருட பாரம்பரியம் கொண்டது. இந்த திரையரங்கம் சென்னையில் ஒரு முக்கிய அடையாளமாக, பல திரை ரசிகர்களின் வாழ்வில் நினைவலைகளின் சின்னமாக விளங்கிய இடமாகும். தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்த திரு எம் ஜி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் திரைப்படம் பார்த்து ரசித்த பெருமை இந்த குட்லக் ப்ரிவியுவ் திரையரங்கிற்கு உள்ளது. மிகவும் புகழ்மிகு அரங்கமாக இருந்த இந்த திரையரங்கம் தான் இப்பொழுது 'குட்லக் ஸ்டூடியோஸ்' எனும் பெயரில் சாலிகிராமத்தில் மீண்டும் உதயமாகிறது. இதனை முன்னணி இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரி துவக்கியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்