மனோஜ் பாரதிராஜாவின் மார்கழி திங்கள்

By செய்திப்பிரிவு

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் மூலம் இயக்குநர் ஆகிறார், மனோஜ் பாரதிராஜா.

இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன் உட்பட பலர் நடிக்கின்றனர். காதல் கதையான இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு ‘மார்கழி திங்கள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE