முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘விருமன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் முத்தையா ஆர்யாவுடன் இணைந்துள்ளார். ‘காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி?: முத்தையாவின் ஆதர்ச ஸ்டைலான தொடை தெரியும் வேட்டியுடன் நாயகன் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவருக்கான முதல் ஷாட் இப்படம் முத்தையாவின் படம் என்று உறுதி செய்கிறது. முந்தைய படங்களில் வேட்டி தொடைக்கு வழிவிட்டு நிற்கும். ஆனால் இந்தப் பட டீசர் வேட்டியை கழட்டிவிட்டு ஆர்யா சண்டையிடும் காட்சிகள் புதுமை. தவிர, முறுக்கு மீசை, அருவாள், ப்ரேமுக்கு ப்ரேம் சண்டை, ஆங்காங்கே சில பஞ்ச் வசனங்கள் என இயக்குநர் முத்தையாவின் டெம்ப்ளேட்டுக்கான படம் என்பதை டீசர் அறுதியிட்டு உணர்த்துகிறது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago