உலக அளவில் பிரபலங்களுக்கு சொந்தமான அழகு பிராண்டுகளில் நடிகை பிரியங்கா சோப்ராவின் "அனோமலி" (Anomaly) பணக்கார பிராண்ட்டுக்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
‘காஸ்மேட்டிஃபை’(Cosmetify) என்ற நிறுவனத்தின் சார்பில் உலக அளவில் பிரபலங்களுக்குச் சொந்தமான பிராண்டுகளில் பணக்கார பிராண்டுகள் எவை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல பாடகர் ரியானாவின் ஃபென்டி பியூட்டி பிராண்ட் 477.2 மில்லியன் பவுண்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது. பிரியங்கா சோப்ராவின் தலைமுடி பராமரிப்பு பிராண்டான ‘அனோமலி’ (Anomaly) 429.9 மில்லியன் பவுண்டுகளுடன் வருவாய் அடிப்படையில் இரண்டாவது பணக்கார பிராண்ட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அமெரிக்க ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான கைலி ஜென்னரின் (Kylie Jenner) கைலி காஸ்மேட்டிக்ஸ் 301.4 மில்லியன் பவுண்டுகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அமெரிக்க பாடகரான செலினா கோம்ஸ் (Selena Gomez) 50.2 மில்லியன் பவுண்டு வருவாயுடன் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளார். பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு தனது ஹேர்கேர் நிறுவனத்தை நிறுவியது குறிப்பிடத்தக்கது.
லண்டனை தளமாக கொண்ட ‘காஸ்மேட்டிக்ஃபை’ நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பிராண்டின் வெற்றியை அளவிட பல வழிகள் உள்ளன. ஆனால் அதில் வருவாய் மிக முக்கியமானது. ஆகவே சமீபத்திய ஆண்டு வருவாயின் அடிப்படையில் பணக்கார அழகு பிராண்டுகளின் பட்டியலை நாங்கள் வெளியிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளது.
» சிம்புவின் ‘பத்து தல’ முதல் நாளில் ரூ.12 கோடி வசூல்
» “நீங்களும் க்யூட்டா இருக்கீங்க...” - நடிகர் விஜய் உடன் வீடியோ காலில் பேசிய குட்டி ரசிகை
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago