“ரொமான்ஸ் வராதான்னு கேட்டார் மணிரத்னம்” - ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது குறித்து சரத்குமார் கலகல பேச்சு

By செய்திப்பிரிவு

“உலக அழகியை கட்டிப் பிடிக்கும் காட்சியை எனக்காக வைத்ததற்கு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. என்னைப் பார்த்து ரொமான்ஸ் வராதா என்று கேட்டார் மணிரத்னம்” என்று நடிகர் சரத்குமார் கலகலப்பாக பேசியுள்ளார்.

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ பாடல் மற்றும் இசை வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சரத்குமார், “மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறோம் என்று சொன்னபோது. அவர் திட்டிவிடுவார் என்று நினைத்தேன். முதல் காட்சியே ஐஸ்வர்யா ராய் உடன் தான். படத்தில் 6 பணிப் பெண்கள் எனது உடையை கழற்றுவார்கள். அதேபோல் வீட்டிலும் இருந்தாலும் நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். ஆனால், அதை படத்தில் வைத்ததற்கு நன்றி.

நான் காதல் செய்து இரண்டு முறை திருமணம் செய்தேன். என்னைப் பார்த்து ரொமான்ஸ் வராதா என்று கேட்டார் மணிரத்னம். முதலில் காதல் திருமணம். இரண்டாவது காதல் திருமணம் என எனக்கு நடந்த இரண்டு திருமணங்களும் காதல் திருமணங்கள்தான். இன்றைக்கும் பலபேர் என்னை காதலிப்பதாக சொல்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்கும் பாக்கியம் எனக்கு மட்டுமே கிடைத்துள்ளது. உலக அழகியை கட்டிப் பிடிக்கும் காட்சியை எனக்காக வைத்ததற்கு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இதைக் கண்டு, படப்பிடிப்பு தளத்தில் பலரும் “நான் பெரும் பாக்கியசாலி" என்றனர். அதிலும் ரீடேக் எடுக்கும் காட்சியில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் என்னிடம் அவரின் வருத்தத்தையும் தெரிவித்தார்.

இந்தக் கதையை நீங்கள் 5 பாகங்களாக எடுத்து பெரிய பழுவேட்டரையர் அவர்களின் காதலை பற்றி சொல்ல வேண்டும். 64 விழுப்புண்கள் பெற்றதை போல் 64 பெண்களை காதலித்தாரா என்று நீங்கள் படம் எடுத்தால் நிச்சயம் அதில் நடிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். அதை ஸ்விட்சர்லாந்தில் எடுப்போம்” என்று கலகலப்பாக பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்