‘பத்து தல’ முதல் ‘விடுதலை’ வரை - தியேட்டர்களில் தெறிக்கவிடும் இந்த வார படங்கள்

By செய்திப்பிரிவு

இந்த வாரம் திரையரங்குகளில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் படங்கள் திரைக்கு வர உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி படங்கள் மூலம் இந்த வார திரையரங்குகள் களைகட்ட உள்ளன.

பத்து தல: ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘பத்து தல’. கௌதம் கார்த்திக், ப்ரியாபவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் வெளியான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக் என கூறப்பட்ட நிலையில், பெரும்பகுதி திரைக்கதையில் மாற்றம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு சிம்புவின் படம் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் படத்தை எதிர்நோக்கியுள்ளனர். நாளை (மார்ச் 30) படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

விடுதலை பாகம் 1: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘விடுதலை பாகம் 1’. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப்படம் ஜெயமோகனின் ‘துணைவன்’ கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தசரா: இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நானி நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தசரா’. இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகியுள்ள இப்படத்தில் மலையாள நடிகர் ஷைன்டாம் சாக்கோ, சமுத்திரகனி, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நாளை (மார்ச் 30) இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

போலா: லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. அஜய் தேவ்கன் நடித்து இயக்கியும் இருக்கும் இப்படம் 3டியில் உருவாகியுள்ளது. நடிகை அமலா பால், அஜய் தேவ்கனின் மனைவியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். தபு, நரேன் நடித்துள்ள கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் நாளை (மார்ச் 30) திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்