வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 1’ படத்தில் 11 இடங்களில் வரும் கெட்டவார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.
அண்மையில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழகத்தில் ‘விடுதலை’ ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது. படம் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் 11 இடங்களில் கெட்ட வார்த்தைகள் வரும் காட்சிகள் வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளன. வெற்றிமாறனின் ‘வட சென்னை’ படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago