ரூ.1000 கோடி வெற்றியைக் கொண்டாட ரூ.10 கோடியில் சொகுசு கார் - ‘பதான்’ குஷியில் ஷாருக்கான்

By செய்திப்பிரிவு

‘பதான்’ திரைப்படம் வெற்றிப்பெற்று ரூ.1000 கோடியைத்தாண்டி வசூலித்துள்ள நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் ஷாருக்கான் ரூ.10 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை வாங்கியுள்ளார்.

கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப்பின் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘பதான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தில் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ பாடலின் காவி நிற உடையின் மூலமாக வெறுப்பு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை ‘பதான்’ முறியடித்து மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் காணக்கிடைக்கிறது.

பாலிவுட்டில் கடும் வீழ்ச்சிக்குப்பின்னர் தன்னுடைய ‘கம்பேக்’ மூலம் நிகழ்ந்த வெற்றி என்பதால் ‘பதான்’ படத்தை எல்லோரையும் விட ஷாருக் அதிகம் கொண்டாடுகிறார். படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், “மீண்டுமொரு சினிமா வாழ்க்கை கொடுத்தற்கு நன்றி” என உருக்கமாக பேசியிருந்தார். இந்நிலையில் ‘பதான்’ படத்தின் ரூ.1000 கோடி வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் ஷாருக்கான் ரூ.10 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ப்ளாக் பேட்ஜ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

555 என்ற நம்பர் ப்ளேட் கொண்ட இந்த காரை மும்பையில் அமைந்திருக்கும் தனது மன்னத் வீட்டிற்கு கொண்டு செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அதேபோல அண்மையில் நடந்த ‘பதான்’ வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது ரூ.5 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் ஷாருக்கான் கட்டியிருந்தது தலைப்புச் செய்தியானது. இதற்கு முன்பாக, ரூ.7 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸின் பேந்தம் மாடல் கார் ஒன்றினை ஷாருக் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

46 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்