நடிகை சாயிஷா நடனத்தில் ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘பத்து தல’. கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜய் அருணாசலம், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக் என கூறப்பட்டாலும் படத்தின் திரைக்கதையில் பல்வேறு விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் வெளியான படத்தின் ‘மறப்போமா’ பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி’ என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சிநேகன் எழுதியுள்ள இந்தப்பாடலை சுபா, நிவாஸ் இணைந்து பாடியுள்ளனர்.
இந்தப் பாடல் வீடியோவை பொறுத்தவரை நடிகை சாயிஷாவின் கிளாமர் நடனத்துடன் குத்துப் பாடலாக இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. புஷ்பா படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலைப் போல இப்பாடலையும் உருவாக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. பாடல் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago