“பகாசூரன் படத்துக்கு திட்டமிட்டு நெகட்டிவ் விமர்சனம்... ஓடிடியில் கொண்டாடுகிறார்கள்” - இயக்குநர் மோகன்.ஜி

By செய்திப்பிரிவு

“பகாசூரன் படத்துக்கு திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்கள் பரபப்பட்டன. தற்போது ஓடிடியில் படத்தை கொண்டாடுகிறார்கள்” என இயக்குநர் மோகன்.ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், “பகாசூரன் திரைப்படம் அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது. திரையரங்குகளில் நிறைய பேர் சென்று பார்த்தீர்கள். பெரியவர்கள்தான் சென்று பார்த்தீர்கள். இளையோர் யாரும் சென்று பார்க்கவில்லை. அதற்குக் காரணம் திட்டமிட்டு பரப்பப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள். படம் குறித்து தவறான விமர்சனங்கள் பரவின. அமேசான் ப்ரைமில் வந்த பிறகு இன்று பலரும் படத்தை கொண்டாடுகிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். இந்தப் படம் உங்களுக்கு பொறுமையாக செல்லலாம்.பிடிக்காத விஷயங்கள் இருக்கலாம்.

அதையெல்லாம் தாண்டி தேவையான கன்டென்ட் இந்தப் படம். அண்மையில் சர்ச் பாஸ்டர் ஒருவர் பிரச்சினையில் சிக்கினார். சென்னையில் கல்லூரியில் பெண் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டடது என பல பிரச்சினைகள் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் படம் ஒரு விழிப்புணர்வு. குடும்பமாக சேர்ந்து இந்தப் படத்தைப் பார்க்கும்போது, பிரச்சினைகளை பேசி தீர்த்துகொள்ள முடியும். அவார்டுக்காக இந்தப் படம் எடுக்கவில்லை. திரௌபதி போல சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த எடுத்த படம் இது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE