காஷ்மீரில் ‘லியோ’ படக்குழுவின் ஹோட்டலில் நடந்தது என்ன? - வீடியோ பகிர்வு

By செய்திப்பிரிவு

விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படக்குழுவுடன் தங்கியிருக்கும் ஹோட்டலில் நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து அங்கு நடந்த சம்பவங்களை யூடியூபர் இர்பான் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘கே.ஜி.எஃப் 2’ படம் மூலம் தென்னிந்தியாவிலும் அறிமுகமாகி இருக்கும் சஞ்சய் தத், இதில் முதன்மை வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இதனிடையே, நேற்று டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியாணா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. தொடர்ந்து படப்பிடிப்பிற்காக காஷ்மீரில் தங்கியிருக்கும் ‘லியோ’ படக்குழு சார்பில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல யூடியூபர் இர்பான் விஜய்யின் ‘லியோ’ படக்குழு தங்கியிருக்கும் ஹோட்டலில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து நடந்த சம்பவங்களை வீடியோவாக்கி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் நடிகர் கதிர் இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ‘லியோ’வில் கதிர் நடிப்பதாக அறிவிக்கப்படாத நிலையில், கதிர் படக்குழுவுடன் இருப்பது சர்ப்ரைஸ். தொடர்ந்து வீடியோவில் நேற்று இரவு நில அதிர்வின்போது நடந்த சம்பவங்களை இர்பான் விவரிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE